ஆபத்தான நிலையில் அமெரிக்க போர்க் கப்பல் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

ஆபத்தான நிலையில் அமெரிக்க போர்க் கப்பல் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் தியடோர் ரூஸ்வெல்டில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்க கடற்படையினர் இதனை உறுதி செய்துள்ளனர் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் பலர் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ள அமெரிக்க கடற்படை வட்டாரங்கள் பெருமளவு புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் போர்க்கப்பலில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தினை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடமாட்டார்கள் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சீனா வடகொரியா போன்ற நாடுகள் அந்த கப்பல் பலவீனமான நிலையில் உள்ளது என கருதக்கூடும் என்ற கரிசனை காரணமாக அமெரிக்க அதிகாரிகள் அந்த விபரங்களை வெளியிடமாட்டார்கள் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய எந்த சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய விதத்தில் குறிப்பிட்ட போர்க்கப்பலை வைத்திருக்க முடியும் என அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை போர்க்கப்பலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அமெரிக்க கடற்படையின் பதில் செயலாளர் சரியான எண்ணிக்கையை வெளியிட மறுத்துள்ளார். 

அமெரிக்க நாசகாரி இறுதியாக 155 நாட்களிற்கு முன்னர் வியட்நாம் துறைமுகமொன்றிற்கு சென்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆனால் அங்கிருந்துதான் நோய் தொற்றியது என்பதை தெரிவிக்க முடியவில்லை, பல போர் விமானங்கள் அந்த கப்பலில் தரையிறங்கியிருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

குறிப்பிட்ட கப்பலில் சுமார் 5000 கடற்படையினரும் பணியாளர்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment