வவுனியாவில் தங்கியிருந்த குடும்பத்தை கொரோனா பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

வவுனியாவில் தங்கியிருந்த குடும்பத்தை கொரோனா பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை

வவுனியா இரேசேந்திரகுளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தை பொலிஸார் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய பரிசோதனைக்காக பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா இராசேந்திரகுளத்தில் வெளிநாட்டில் இருந்து உறவினர் வீட்டில் ஒரு குடும்பம் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு பொதுமக்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு இன்று காலை 11 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டிருந்தனர். 

இவ் விசாரணையின் பின்னர் குறித்த குடும்பத்தினருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

பெல்ஜியத்தில் இருந்து நேற்றையதினம் இலங்கைக்கு வருகை தந்த கணவனும் கடந்த மாத இறுதியில் வருகை தந்திருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுமே கொரோனோ பரிசேதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad