கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க புகைத்தலை தவிர்க்கவும் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க புகைத்தலை தவிர்க்கவும்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு புகைத்தலை கைவிடுவது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உகந்தது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அல்லது (COVID-19) பாதிப்புக்கு உள்ளாகுவோருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இதன் போது ஈரல் பலவீனமாக இருந்தால் இந்த உயிரிழப்பு எளிதில் ஏற்படக்கூடும்.

இதனால் சிகரட் முதலானவற்றை புகைப்பதினால் ஈரல் பலவீனமடையும் என்பதினாலேயே புகைத்தலை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad