ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கும் மனைவிக்கும் பிணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கும் மனைவிக்கும் பிணை

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் முறைகேடு தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கு தொடர்பில் அவர்கள் இருவரும் கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் இன்றையதினம் (04) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை 2 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 20 மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எயார்பஸ் நிறுவன விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் 2 மில்லியன் டொலரை கபில சந்திரசேன தரகு பணமாக பெற்றதாகவும், அது இரண்டாவது சந்தேகநபரான அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு உரித்தான வெளிநாட்டு நிறுவனங்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment