முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 26 முதல் மே 12 ஆம் திகதி வரை அவருக்கு வெளிநாடு சென்று திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று (04) கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வாவினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, ரூபா ஒரு மில்லியன் பிணையின் அடிப்படையில் அவருக்கு இரண்டு வார வெளிநாடு செல்லும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சம்பிக்க ரணவக்கவினால் விடுக்கப்பட்ட குறித்த பயண அனுமதி தொடர்பில் சட்டமா அதிபர் எதிப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கிற்கு அமைய, அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பில் சம்பிக ரணவக்க கடந்த டிசம்பர் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு, டிசம்பர் 24ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு எதிர்வரும் மே 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment