கதிர்காம ஆலயத்துக்கு உரிமை கோரி மூவர் வழக்கு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

கதிர்காம ஆலயத்துக்கு உரிமை கோரி மூவர் வழக்கு தாக்கல்

கதிர்காம ஆலயத்துக்கு உரிமை கோரி முன்னாள் கப்புராளையின் மூன்று மகன்மார் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கதிர்காம ஆலயத்தில் கப்புராளையாக செயற்படுவதற்கு தமக்கு பரம்பரை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

முன்னாள் கப்புராளை பத்மசிறி அதிகாரம் என்பவரின் புதல்வர்களான அநுராத பண்டார அதிகாரம், ரொஷான் அனுருத்த அதிகாரம் மற்றும் தேவிந்த சீவலி அதிகாரம் ஆகிய மூவருமே இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 

அத்துடன் தற்போது பதவியிலிருக்கும் ஐந்து கப்புராளைகளையும் அவர்கள் எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டுள்ளனர்.

காவந்திஸ்ஸ மன்னர் காலத்திலிருந்து கதிர்காமம் ஆலயத்தின் பராமரிப்புப் பணிகளை தமது குடும்பத்தவர்களே முன்னெடுத்து வருவதாகவும் ஆலய பராமரிப்புகளுக்காக துட்டகைமுனு மன்னர் தனது பூட்டனான நந்திமித்ர அதிகாரம் என்பவரிடமே கடமைகளை பொறுப்பு வழங்கியிருந்ததார்.

இதன்படி 2,300 வருடங்களாக தமது பரம்பரையினரே கதிர்காம ஆலயப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது பணிகளை முன்னெடுத்துவரும் ஐந்து கப்புராளைகளுக்கும் கதிர்காம ஆலயத்தில் பணிகளை முன்னெடுப்பதற்கு எவ்வித அதிகாரமோ பரம்பரை உரிமையோ இல்லையென்றும் அவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment