இறக்குமதியான சொகுசு பஸ்களை பரிசோதனைக்குட்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

இறக்குமதியான சொகுசு பஸ்களை பரிசோதனைக்குட்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பணிப்பு

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான சொகுசு பஸ் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்துள்ள விடயம் தொடர்பில், நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏனைய 15 சொகுசு பஸ்களையும் தீவிர பரிசோதனைக்குட்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

பிரயாணிகளைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் வகையிலேயே இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் பஸ்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment