எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று (05) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் பிரதி, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியினால் ஏற்கனவே வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.
தேர்தல் தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் பிரதி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் நடவடிக்கை பிரிவை ஸ்தாபிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment