பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினை தொடர்ந்து, சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் விசேட அதிகாரத்துக்கு அமைவாக கடந்த 02ஆம் திகதி நள்ளிரவுக்கு வரும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள காபந்து அமைச்சரவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தனது உத்தியோகபூர்வ அரச வாகனம் மற்றும் பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள வாகனங்களையும் நேற்றுமுன்தினம் ஒப்படைத்துள்ளார்.
அத்துடன் கரு ஜயசூரிய நாடாளுமன்றின் ஒவ்வொரு துறைக்கும் விஜயம் செய்ததுடன், தான் சபாநாயகராக இருந்த காலத்தில் எழுந்த நெருக்கடியான காலத்திலும் நாடாளுமன்ற கடமைகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
இதேவேளை குறித்த நாடாளுமன்ற கலைப்பு அறிவித்தலினை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைவாக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
நாடாளுமன்றம் கலக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment