கைகுலுக்க வேண்டாம் நமஸ்தே சொல்லுங்கள் போதும் - இஸ்ரேல் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

கைகுலுக்க வேண்டாம் நமஸ்தே சொல்லுங்கள் போதும் - இஸ்ரேல் பிரதமர்

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த எளிய நடவடிக்கையாக மக்கள் சந்திக்கும்போது வழக்கமாக கைகுலுக்குவதற்கு பதிலாக ‘நமஸ்தே’ என்று சொன்னால் போதும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். 

கூட்டத்தில் அவர் பேசும்போது, “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எளிய நடவடிக்கையாக மக்கள் சந்திக்கும்போது வழக்கமாக கைகுலுக்குவதற்கு பதிலாக, இந்தியர்கள் வழியில் ‘நமஸ்தே’ என்று சொன்னால் போதும்” என்றார்.

அவர் இவ்வாறு கூறியதோடு நிற்காமல் ‘நமஸ்தே’ சொல்வது எப்படி என்று அதிகாரிகளுக்கு கைகளை கூப்பி செய்துகாண்பித்தார்.

No comments:

Post a Comment