ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா நீடிக்கும் - ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா நீடிக்கும் - ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் வரை கொரோனாவின் தாக்கம் இருக்கலாம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் எப்போது முடிவுக்குவரும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், ''நாம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் முடிவுக்கு வரும்’’ என்றார்.

No comments:

Post a Comment