கொரோனாவை கட்டுப்படுத்தும் மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

கொரோனாவை கட்டுப்படுத்தும் மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி நியமனம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் (National Operation Center) தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இல.1090, ஶ்ரீ ஜயவர்தனபுர, இராஜகிரியவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனை உறுதி செய்யும் வகையிலான பொதுச் சுகாதார மற்றும் ஏனைய சேவைகளை ஒருங்கிணைத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ சேவைகளை உறுதி செய்யும் வகையில் இம்மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad