எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, கட்டுப்பணம் உள்ளிட்ட விபரங்கள் மற்றும் அறிவிப்புகள் அடங்கிய பல்வேறு வர்த்தமானிகளை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளினால் வைப்புப் பணம் வைப்பிலிட வேண்டியதில்லை என்பதோடு, சுயேச்சைக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் தலா ரூபா. 2,000 வீதம் அமைவதோடு, தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் அதற்கான கட்டுப்பணம் செலுத்தப்படவேண்டும்.
அதற்கமைய தேர்தல் மாவட்ட ரீதியில் போட்டியிட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுவினர் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் ஆகியன பின்வருமாறு அமைகிறது.
அத்துடன் தாம் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தில் இருக்கும் நிலைமை காரணமாக தனக்கொதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்திற்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாதுபோகுமென்ற நியாயமான அச்சத்தைக் கொண்டுள்ள வாக்காளர்கள் வேறொரு வாக்ககெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, வாக்காளரொருவர் வேறொரு வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கையொன்றை முன்வைக்கலாம். 1988 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 127ஆ ஆம் பிரிவின் கீழ் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அந்தந்த தேர்தல் மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்துள்ளது.
No comments:
Post a Comment