நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பெருமளவிலானோர் வீட்டிலேயே தங்கியிருப்பதால் நீர்ப்பாவனை அதிகரித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர் மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது.
எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்து வழங்குவதற்கு நீர் விநியோகச் சபை கவனம் செலுத்துகின்றது.
திடீர் நீர் விநியோகத் தடை, நீர் கட்டணப் பட்டியல் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 071 9399999 இலக்கத்திற்கு குறுந்தகவல்களை அனுப்புவதன் மூலம் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்து.
No comments:
Post a Comment