தீயில் பல இலட்சம் பெறுமதியான உடமைகள் எரிந்து நாசம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

தீயில் பல இலட்சம் பெறுமதியான உடமைகள் எரிந்து நாசம்

வவுனியா மாடசாமி கோவில் வீதியில் இன்று (30) காலை 10.00 மணியளவில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையானதால் பல இலட்சம் பெறுமதியான உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

வவுனியா, மாடசாமி கோவில் வீதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொருட் கொள்வனவுக்காக வெளியில் சென்றுள்ள போது வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனை அவதானித்த அயலவர்கள் வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப் படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், வீட்டில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்துக்குரிய காரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment