ஈரானில் கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களின் சடலங்களை வைத்தியாசலையில் பைகளில் போட்டு கட்டப்பட்ட நிலையில், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அத்தோடு இவ்வாறு வெளியாகியிருக்கும் காட்சிகள் வைத்தியசாலையின் மருத்துவப் பணியாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் உண்மையான விபரங்கள் மறைக்கப்டுவதாக கருதப்படுவதை அடுத்தே, தற்போது இவ்வாறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிகியுள்ளன.
குறித்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் 836,000 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக இறந்த சடலங்களை பைகளில் இட்டு வரிசைகளில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் மக்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் ஈரானில் 92 பேர் உயிரிழந்ததோடு, பாதிப்புகளும் 2,922 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 சதவீதமானோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவிற்கு அடுத்தபடியாக கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment