வெளிநாட்டு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரண கட்டணத்தில் தங்குமிட வசதி - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

வெளிநாட்டு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரண கட்டணத்தில் தங்குமிட வசதி

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்காக செல்லும் பணியாளர்கள் மற்றும் நாட்டில் வாழும் குடும்ப அங்கத்தவர்களின் சேமநலன்களை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய விடுமுறை விடுதி மார்ச் 17 ஆம் திகதி எதிர்வரும் சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தயின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கதிர்காமம் கந்தசுரிந்துகம ரஜமாவத்தையில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை ஓய்வு விடுதி கட்டடத் தொகுதி 3 மாடிகளைக் கொண்டது. அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நிவாரண கட்டணத்தில் இங்கு தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அறைகளை ஒதுக்கீடு செய்வதற்கு அலுவலகத்தின் இணையத்தளத்தின் www.slbfe.lk மூலம் அல்லது 0112 880500, 1989 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தங்குமிட வசதிளைப் பதிவு செய்ய முடியும்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment

Post Bottom Ad