கினிகத்தேனையில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் பலி! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

கினிகத்தேனையில் இடம்பெற்ற கோர விபத்து - இளைஞன் பலி!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை ஹொரகட பிட்டவல வீதியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (05) முற்பகல் 2.00 மணி அளவில் ஹொரகட வெதும்பகம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஹொரகட பிட்டவல பகுதியைச் சேர்ந்த அனுச தில்சான் வயது 19 என்ற இளைஞனே இவ்விபத்தில் பலியானதாகவும் இவரது சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கினிகத்தேனை பகுதியிலிருந்து ஹொரகட வழியாக பிட்டவல தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஹொரகட வழியாக கினிகத்தேனையை நோக்கி வந்த லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த மோட்டார் சைக்கிள் வளைவு பகுதியில் வழுக்கிச் சென்றதால் இளைஞனுக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது. இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் சுந்தரலிங்கம்

No comments:

Post a Comment

Post Bottom Ad