ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலையை கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றுவது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து, பிரதேசவாசிகள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எலகந்த சந்தியில் அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு அப்பகுதி உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை நிறுவுவதன் மூலம் தமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த இடத்திற்கு விஜயம் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா, இவ்விடத்தில் இதனை மேற்கொள்ள அனுமதிக்கமாட்டேன் என தெரிவித்தார்.
தென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலையை தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
No comments:
Post a Comment