தம்மை குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் (CID) என கூறி, கப்பம் கோரிய ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிட்டுவல்கொடை, யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு, அவருக்கு பாதாள குழுக்களினால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து, அதிலிருந்து பாதுகாக்க ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் நேற்றுமுன்தினம் (04) கம்பஹா குற்ற விசாரணைப் பிரிவினருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, நேற்றையதினம் (05) ஒரு பெண் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கர்கள் கைது செய்யப்பட்டு, மல்வத்துகிரிபிட்டிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37, 40, 43 ஆகிய வயதுடைய பலாங்கொடை, அத்தனகலை, கம்பஹா, வத்துரகமை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை இன்று (06) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment