நீதிமன்ற உத்தரவுகளை மீறி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இரு பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 22 பல்கலைக்கழக மாணவர்களின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர்களால் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்வு (மோசன்) மனுவை இன்று (06) விசாரித்த கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அதனை நிராகரிப்பதாக உத்தரவிட்டார்.
கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள கல்வியமைச்சிற்கு முன்னால், பிரதான வீதி, பாதசாரிகள் நடைபாதை மற்றும் அமைச்சின் பிரதான நுழைவாயில் ஆகியவற்றை மூடும் வகையில் கொட்டகை அமைத்து, சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்து குறித்த 22 பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இவ்வாறு கைது செய்யபட்டிருந்தனர்.
பகிடிவதை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை அகற்றுமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில், குறித்த 22 பேருக்கும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment