பௌத்த மதத் தலைவர்கள் உள்ளடங்கிய குழுவொன்று திங்கட்கிழமை (2) நளீமிய்யா இஸ்லாமிய உயர் கலாபீடத்திற்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்தக் குழுவில் பேருவளைப் பகுதியில் அமைந்துள்ள நான்கு பௌத்த விகாரைகளின் தலைவர்களும், பேருவளைப் பிரதேச சர்வ மதக் குழுவின் (எல்.ஐ.ஆர்.சி) உறுப்பினர்களும் உள்ளடங்குவர்.
நான்கு தசாப்த காலப்பகுதியில் நிறுவனத்தின் செயல்பாடு, அதன் நோக்கங்கள் மற்றும் அதன் கல்வி அடைவுகள், சாதனைகள் குறித்து கல்வித்துறை பொறுப்பாளர்களுடன் இக்குழு சுமுகமான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டது.
இந்தக் கலந்துரையாடல் தவறான புரிதல்கள் மற்றும் தவறான கருத்துக்களை அகற்றுவதற்கும், சமூகங்களுக்கிடையில் ஒரு சிறந்த உறவினை கட்டியெழுப்பவும் பெரிதும் உதவியாக அமையுமென பிரதிநிதிகள் குழு கருதியது.
எதிர்காலத்திலும் இந்த வகையான சந்திப்புகள் தொடர வேண்டும் என்றும் குறிப்பாக பேருவளைப் பிரதேசத்தில் வாழும் சமூகங்களிடையே ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த சில செயற்திட்டங்கள் நளீமிய்யா உயர் கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இக்குழு வலியுறுத்தியது.
No comments:
Post a Comment