கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் முறைப்பாடளிக்க புதிய முறை ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் முறைப்பாடளிக்க புதிய முறை !

பொலிஸ் மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) ஆகியன இணைந்து காணாமல்போன தொலைபேசிகள் குறித்து முறையிடுவதற்கு புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதற்காக www.ineed.police.lk இணையத்தளம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ள பொலிஸ் மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு குறித்த இணையத்தளத்தில் தொலைந்துபோன கையடக்கத் தொலைபேசி தொடர்பான முறைப்பாடுகளை வழங்க முடியுமென தெரிவித்துள்ளது.

குறித்த இணையத்தளத்திற்கு செல்வதன் மூலம் குறித்த சேவையை பெற்றுக் கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தொலைந்துபோன தொலைபேசி தொடர்பான விபரங்களை பொலிஸ் நிலையத்திறகோ அல்லது தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கோ சென்று முறைப்படத் தேவையில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment