மன்னாரில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்வு - பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடிக்கும் மக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

மன்னாரில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்வு - பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடிக்கும் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் சுமார் மூன்று நாட்களின் பின் இன்று (24) காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (24) காலை 6 மணிமுதல் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடித்துக் கொண்டனர்.

காலை 6 மணியளவில் மன்னார் சதொச விற்பனை நிலையத்திற்கு முன் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்தனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தனின் தலைமையில் பொலிஸார் மன்னார் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மன்னார் சந்தை பகுதிக்குள் வாகனங்களில் பயணிக்க பொலிஸார் தடை விதித்துள்ளதோடு, நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் எரிபொருள் நிறப்பும் நிலையம், பல் பொருள் விற்பனை நிலையங்கள், புட்சிட்டி போன்ற விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். 

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று அவதானித்து வருகின்றார்.

மேலும் தென்பகுதியில் இருந்து மரக்கறி வகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்டத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலிஸார், இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரொஸாரியன் - மன்னார் குறூப் நிருபர்

No comments:

Post a Comment