(நா.தனுஜா)
இலங்கையின் சுகாதார மருத்துவர்கள் குழாம், தமது துறைசார் நிபுணத்துவத்திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக் கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள் என சீனா பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கண்டறியப்பட்ட சுற்றுலாப் பயண வழிகாட்டியாகப் பணியாற்றிய நபர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாக வெளியான செய்தியை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சீனத்தூதரகம் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கையின் சுகாதார மருத்துவர்கள் குழாம், தமது துறைசார் நிபுணத்துவத்திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக் கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில் மருத்துவக் குழாமிற்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதேவேளை குணமடைந்த சுற்றுலாப் பயண வழிகாட்டிக்கும் வாழ்த்துக்களைக் கூறுகிறோம்.
No comments:
Post a Comment