உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 71 ஆயிரத்து 309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 29 ஆயிரத்து 432 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 243 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கிவரும் நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment