எதிர்வரும் 2 தினங்களுள் தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

எதிர்வரும் 2 தினங்களுள் தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொரோனா வைரஸை தடுப்பதற்காக எந்தவித தட்டுப்பாடுமின்றி மருந்து வகைகள், பாதுகாப்பு கவசங்கள் மற்றும் வைத்திய உபகரணங்களை மொத்தமாக பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரம், சுதேசிய வைத்திய சேவை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சில் நடைபெற்றுள்ளது.

வைத்திய விநியோக பிரிவின் அதிகாரிகள் அரசாங்க மருந்தக கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த பிரிவுகளுக்கு தேவையான நிதிகளை விரைவாக வழங்குவதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் 2 தினங்களுள் தேவையான மருந்து உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக வைத்தியசாலைகளில் விநியோகிப்பதற்கு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment