நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழு - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது - தேர்தல்கள் ஆணைக்குழு

பாராளுமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளைய தினம் இடம்பெறாது என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளை (16) அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல்கள் ஆணைக்குழு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆயினும் ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய, மார்ச் மாதம் 17, 18 ஆகிய இரு தினங்களிலும் அலுவலக நேரங்களிலும் மார்ச் 19 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுக்களை கைளிக்க முடியும் என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், மார்ச் 19 ஆம் திகதி வேட்பு மனு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 1981 ஆம் ஆண்டு இலக்கம் 01 இன் கீழான பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24 (1) சரத்திற்கு அமைய, தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல் வாக்களிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் தபால் மூல வாக்கிற்கான விண்ணப்பம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையில் ஏற்றுக்கொள்ளுமாறு, அனைத்து தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுக்கும் பிரதி / உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் வாக்களிப்பிற்கான விண்ணப்பம் மார்ச் 06 முதல் 16 வரை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad