கொரோனா தெற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி சுகாதார அமைச்சிடம் உண்டு - அமைச்சின் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

கொரோனா தெற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி சுகாதார அமைச்சிடம் உண்டு - அமைச்சின் செயலாளர்

கொரோனா தெற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி தற்பொழுது கிடைத்திருப்பதாக சகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பாக இன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொலைபேசியின் ஊடாக கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 

தற்போதைய நிலைமையில் அதிமேதகு ஜனாதிபதியினால் தமக்கு தேவையான அனைத்து நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலதிகமாகவும் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

2019.12.31 அன்று வழங்கப்பட வேண்டியிருந்த 40 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது சுகாதார ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவது குறித்தும் அவர் பதிலளித்தார். அவ்வாறான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இவற்றை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று தேவையான மருந்து மற்றும் உபகரணங்களை கொள்னவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதற்காக அவசர கூட்டம் ஒன்றுக்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment