(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பவற்றின் கூட்டிணைந்த உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளிக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை உலக சுகாதார ஸ்பானத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராஷியா பென்டிஸேயினால் சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தனவிடம் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கையளிக்கப்பட்டது.
அவ்வாறு கையளிக்கப்பட்ட உபகரணங்களில் எச்.டி.யூ படுக்கைகள், சுவாசவீதம் மற்றும் இதயத்துடிப்பு என்பவற்றை கண்காணிக்கும் கருவி, ஒட்சிசன் நிரம்பல் கண்காணிப்பான், இன்பியூஷன் பம்ப்ஸ், ஈ.சி.ஜி கருவிகள், எக்ஸ்ரே கதிர்ப்பான் கருவிகள், சுத்திகரிப்பான்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
No comments:
Post a Comment