சீனாவில் தற்போது தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அப்பிள் (Apple Inc) நிறுவனமானது தனது அனைத்து சீன பிரதான அலுவலகங்களளை மூடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சீனாவில் வுஹானில் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச நாடுகள் தற்போது அவதானமாக செயல்பட்டு வரும் இந்நிலையிலேயே அப்பிள் (Apple Inc) நிறுவனம் இம் முடியவை எடுத்துள்ளது.
அத்தோடு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தனது அனைத்து அலுவலகங்களையும் மூடவுள்ளதாக அப்பிள் (Apple Inc) அறிவித்துள்ளது. அதேவேளை வெகு விரைவில் தனது அலுவலகங்களை அப்பிள் (Apple Inc) நிறுவனம் திறக்குமென தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாரத்தில் சீனாவில் தனது மூன்று அலுவலகங்களை தற்காலிகமாக முடிவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹுபே மாகாணத்தில் பல சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment