பாக்கிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

பாக்கிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

பாக்கிஸ்தானில் கோதுமை பயிரிகளை அழிக்கும் வெட்டுக் கிளி தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமாக கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக் கிளிகள் நாசம் செய்து வருகிறது. 

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிர்களை வெட்டுக் கிளிகள் நாசம் செய்துள்ளதால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். 
இந்த வெட்டுக் கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் ஃப்ர்டோஸ் அஸ்க்யூ அவான் கூறுகையில், '20 ஆண்டுகளில் இல்லாத வெட்டுக் கிளி தாக்குதலை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்த அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அந்நாட்டு உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் மஹ்டும் குஷ்ரோ பஹ்டிர் கூறுகையில், 'வெட்டுக் கிளி தாக்குதல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழல்நிலை’ இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment