ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி வடக்கு, கிழக்கில் போட்டியிடாது - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி வடக்கு, கிழக்கில் போட்டியிடாது - தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா) 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து அமைத்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி வடக்கு, கிழக்கில் போட்டியிடாது. அந்த கூட்டணியின் அங்கம் வகிக்கும் வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வடக்கு, கிழக்கில் களமிறக்க உத்தேசித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவரின் வழிகாட்டலில் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறுவோம். 

நாட்டின் முன்னேற்றத்துக்கான எமது இந்த பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

No comments:

Post a Comment