கொரோனா நோயாளிகளுடன் நடனம் ஆடும் வைத்தியர்கள் : காரணத்தை வெளியிட்ட வைத்தியசாலை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

கொரோனா நோயாளிகளுடன் நடனம் ஆடும் வைத்தியர்கள் : காரணத்தை வெளியிட்ட வைத்தியசாலை

சீனாவில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த உலகத்தையும் நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் வைத்தியர்கள் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக இந்த நடன பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூரையும் கடந்துள்ளதுடன், சுமார் 66,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சீனாவின் வுகான், பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கி வருகின்றன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டோரை காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்களும், தாதியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டோரின் மனநிலையை சற்று வித்தியாசமான முறையில் மாற்றுவதற்காகவும், அவர்களிற்கு நம்பிக்கையை உண்டாக்கவுமே, இவ்வாறான நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment