கூட்டணியின் சின்னம், பெயர் தொடர்பில் இவ்வாரத்தில் உறுதியாக அறிவிக்கப்படும் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

கூட்டணியின் சின்னம், பெயர் தொடர்பில் இவ்வாரத்தில் உறுதியாக அறிவிக்கப்படும் - ரஞ்சித் மத்தும பண்டார

(ஆர்.விதுஷா) 

வலுவான கூட்டணி குறித்து அனைத்து தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இவ்வாரத்தில் உறுதியாக அறிவிக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

பொதுத் தேர்தல் அண்மிக்கும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சிக்குள் சின்னம் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இது தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

தேர்தலில் பொதுக் கூட்டணியாக போட்டியிடுவது என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு முடிவெடுத்திருந்த நிலையில் எந்த சின்னத்தில் களமிறங்குவது என்ற விடயத்தில் இரு தரப்பிற்கும் இடையில் இழுபறி நிலைமை ஏற்பட்டிருந்தது. 

இந்நிலையில் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று ரணில் தரப்பினர் கூறியிருந்த நிலையில், அதற்கு தாம் இணக்கம் தெரிவிப்பதாகவும், உத்தியோகப்பூர்வமாக ஐக்கிய தேசிய கட்சி அந்த சின்னத்தை கையளிக்கும் பட்சத்தில் தாம் பெற்றுக் கொள்வதாகவும் சஜித் அணியினர் தெரிவித்தனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று கூட்டணியின் சின்னம் தொடர்பில், இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்து. யானை சின்னத்திலா அல்லது அன்னம் சின்னத்திலா அல்லது வேறு ஏதேனும் சின்னத்திலா போட்டியிடுவது என்பது தொடர்பிலான தீர்க்கமான முடிவு இவ்வாரத்திற்குள் எடுக்கப்படும் என கூட்டணியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment