கொரோனா வைரஸ் தாக்கம் - பிரான்சில் முதல் மரணம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் - பிரான்சில் முதல் மரணம்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாடுகளில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment