கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலின் பயணிகள் இறுதியாக கம்போடியாவில் கால்பதித்தவேளை கம்போடிய பிரதமர் அவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றுள்ளார்.
தாய்லாந்து, ஜப்பான், தாய்வான் உட்பட பல நாடுகளுக்கு கப்பலுக்கு இடமளிக்க மறுத்த பின்னர் கம்போடியா இறுதியாக அனுமதி வழங்கியது.
வெஸ்டர்டாம் கப்பலின் பயணிகள் கம்போடியாவில் இறங்குவதற்கான அனுமதியை வழங்கிய பிரதமர் குன் சென் அவர்களுக்கு மலர் வழங்கி வரவேற்றுள்ளார்.
கம்போடியா வறுமையான நாடு என்ற போதிலும் உலகமும் பிராந்தியமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக கம்போடியா எப்போதும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கம்போடிய இந்த கப்பளுக்கு அனுமதியளிக்காவிட்டால், வேறு எந்த நாடு அதற்கு அனுமதியளிக்கும் என கேள்வி எழுப்பியுள்ள பிரதமர் இது பாரபட்சத்திற்கோ அல்லது அச்சத்திற்கோ உரிய தருணமல்ல என்ற செய்தியை மக்களுகும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன் என குறிப்பிட்டுள்ளார். கப்பலில் இருந்து இறங்கியவர்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்லலாம் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இங்கிருப்பது அற்புதமாக உள்ளது, பிரதமர் அவர்களே நன்றி என தெரிவித்துள்ள கப்பல் பயணியான அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த பெண்மணியொருவர் கம்போடி பிரதமர் மிகச் சிறந்த இதயமுள்ளவர் என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் நாடு மிகச் சிறந்த செயலை செய்துள்ளது என அதற்கு நன்றி உங்கள் செயலை நாங்கள் பாராட்டுகின்றோம் என புளோரிடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து அழைத்து செல்லப்பட்ட பயணிகள் கம்போடிய தேசிய உடையுடன் காணப்பட்டுள்ளனர். ஹொலன்ட் அமெரிக்காவை சேர்ந்த வெஸ்டர்டாம் கப்பல் சுமார் 2000 இற்கும் அதிகமானவர்களுடன் கடந்த சில வாரங்களாக நடுக் கடலில் செல்வதற்கு துறைமுகம் இன்றி அலைந்திரிந்த நிலையிலேயே கம்போடியா அதற்கு இடமளித்துள்ளது.
கப்பலில் உள்ள பயணிகள் எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியான பின்னரும் பல நாடுகள் அந்த கப்பலுக்கு தங்கள் துறைமுகங்களில் அனுமதி மறுத்திருந்தன.
சீனாவின் நெருங்கிய நண்பரான கம்போடிய பிரதமர் ஏனைய ஆசிய நாடுகளைப் போன்று செயற்படாமல் வைரஸ் குறித்த அச்சப்படுவதை தவிர்த்து கொண்டுள்ளார்.
கம்போடியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடிப்போக்குவரத்தினை இடைநிறுத்துவதற்கு அவர் மறுத்துள்ளார். அவ்வாறான நடவடிக்கை இரு தரப்பு உறவுகளையும் தனது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் ஒருவர் கொரோனவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment