ஐக்கிய தேசிய முன்னணி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம், கட்சித் தலைமையுடன் கலந்துரையாடி முடிவு - எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

ஐக்கிய தேசிய முன்னணி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம், கட்சித் தலைமையுடன் கலந்துரையாடி முடிவு - எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி யானைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. கட்சித் தலைமையுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்றுத் தெரிவித்தார். 

தேர்தலை எதிர்கொள்வதற்கான சகல பொறுப்புகள் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமையவே பொறுப்புகள் சஜித்திடம் கொடுக்கப்பட்டுள்ளன. 

கட்சிக்குள் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக சஜித் அணியும், பங்காளிக் கட்சிகளும் தனியான கூட்டணி அமைத்து களமிறங்க திட்டமிட்டிருந்தன.

பொதுக் கூட்டணியமைத்து தனியான சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுவந்தது. 

ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஓரளவு திருப்தியடைந்த நிலையில், சஜித் அணியின் முன்னைய திட்டம் கைவிடப்பட்டு ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பும் சஜித் பிரேமதாசவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் பல தொகுதிகளில் அமைப்பாளர்களாக புதியவர்கள் நியமிக்கப்படலாமெனத் தெரியவருகின்றது. 

வேட்பாளர்களில் பெண்களுக்கு 25 சதவீதமும், இளைஞர்களுக்கு 25 சதவீதமும் ஒதுக்கவும், திறமை அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதே சமயம் வடக்கு, கிழக்குக்கு வெளியே தெற்கில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு வேட்பு மனு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பௌத்த பெரும்பான்மை வாக்குகளை ஈர்ப்பதே இதன் நோக்கமெனவும் தெரியவருகின்றது.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment