சீனாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் மேலும் 204 மாணவர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

சீனாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் மேலும் 204 மாணவர்கள்

சீனாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ள மேலும் 204 இலங்கை மாணவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக ​வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக பீஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தம் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 305 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்று தொடர்பாக சுமார் 16 நாடுகளில் 130 க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் உள்ள ஏனைய நாட்டவர்களை தத்தமது நாடுகளுக்கு அழைத்து வரும் முனைப்பில் உலக நாடுகள் செயற்பட்டு வருகின்றன.

அதற்கமைய சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தில், சீனாவின் வுஹான் நகரிலிருந்து 33 மாணவர்கள் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் தியத்தலாவை இராணுவ ஆதார வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, எதிர்வரும் 2 வாரங்களுக்கு இராணுவ ஆரம்ப வைத்தியசாலையின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் 14 நாட்களின் பின்னரே வௌிப்படும் என்பது வைத்தியர்களின் கருத்தாகும்.

இதனால் சீனாவின் வுஹானிலிருந்து வருகைதந்த மாணவர்களை 14 நாட்களுக்கு வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment