ரஷியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் ஜனாதிபதி புதின் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரஷியாவிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.
ஆனால் மேற்கத்திய கலாசாரங்களில் இருந்து ரஷியாவை விலக்கி வைக்க விரும்பும் அந்த நாட்டின் ஜனாதிபதி புதின், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை ரஷியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் சட்டபூர்வமாகாது என்று புதின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது தாய், தந்தை என அழைக்கப்படும் பாரம்பரிய முறை, பெற்றோர் 1, பெற்றோர் 2 என்று அழைக்கப்படுவதன் மூலம் திசை திருப்பப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்.
நான் இது தொடர்பாக ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறேன். எனினும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் குறித்த எனது நிலைப்பாட்டை மீண்டும் விளக்குகிறேன்.
நான் ரஷியாவின் ஜனாதிபதியாக இருக்கும் வரை இங்கு ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணம் நடைபெறுவதை சட்டபூர்வமாக்கமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment