(எம்.என்.எம்.அப்ராஸ்)
72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் முகப்பு தோற்றத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா அவர்களின் முயற்சியின் கீழ் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய பிரதேச செயலகத்தின் வெளி முகப்புதோற்றத்தை அழகுபடுத்தி செம்மைப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் (31) மர நடுகை நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நிர்வாக உத்தியோகத்தர் எம்.மனாஸ், பிரதம முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்ஸான், நிதி உதவியாளர் எம்.ஐ.எம்.ரகுமான், பிரதம முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் (காணி) யூ.எல் ரமீஸ், உத்தியோகத்தர்கள் உதவியாளர் ஏ.சி.எம்.பழில் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment