ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் காரணமாக அச்சுறுத்தலை எதிர் நோக்கியுள்ளதாக தோட்ட மக்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2020

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் காரணமாக அச்சுறுத்தலை எதிர் நோக்கியுள்ளதாக தோட்ட மக்கள்

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் காரணமாக தமது வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பத்தனை, பெயித்திலி தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இது தொடர்பில் தோட்ட நிர்வாகம், சுகாதாரப் பிரிவு, கல்லூரி நிர்வாகத்திற்கு என சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுக்கும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டபோதிலும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய தோட்ட மக்கள், இதற்கு எதிர்ப்பை வெளியிடும் முகமாகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

பத்தனை பெயித்திலி தோட்டத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் இத்தோட்டத்திலுள்ள வடிகாணுக்கு வந்த பிறகே பிரதான ஆற்றை நோக்கி செல்கின்றன. இதனால் குறித்த தோட்ட மக்கள் சுகாதார ரீதியில் பல அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். 

தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதுடன், சுழல், வளியும் மாசடைகின்றது. அதுமட்டுமல்ல சிறுவர் பராமரிப்பு நிலையமும் வடிகாணை அண்டிய பகுதியிலேயே அமைந்துள்ளதால் சிறார்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இவை தொடர்பில் தோட்ட நிர்வாகம், கல்லூரி, சுகாதார பிரிவு என அனைத்து தரப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டபோதிலும், மலக்கழிவுகள் வெளியேற்றப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டியும், இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே வீதியில் இறங்கியுள்ளோம் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து சுகாதாரப் பரிசோதகரிடம் வினவியபோது, "மக்களின் முறைப்பாடு தொடர்பில் கல்லூரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறினார்.

No comments:

Post a Comment