மாத்தறை மாவட்டத்தில் புதிதாக ஐந்து தேசிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
திஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத் திட்டத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கம் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கமைய மாத்தறை மாவட்டத்தில் புகுல்வெல்ல, ஹக்மன, பிடபத்தர, அதுரலிய மற்றும் வெலிப்பிட்டிய ஆகிய பிரதேச செயலகங்களில் புதிதாக இத் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன.
நாட்டில் 330 பிரதேச செயலகங்கள் இருந்தும் 124 பிரதேச செயலகப் பிரிவுகளில் தேசிய பாடசாலைகளில்லை வடக்கில் 38 பிரதேச செலகங்களில் 12 பிரதேச செயலக பிரிவுகளில் மாத்திரமே தேசிய பாடசாலைகள் உள்ளன. திட்டமிடல் மூலம் இந்நாட்டில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
புதிய வேலைத் திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் 373 தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
வெலிகம நிருபர்
No comments:
Post a Comment