சட்டவிரோதமாக இலங்கை வந்த இந்தியர்கள் உட்பட ஐவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

சட்டவிரோதமாக இலங்கை வந்த இந்தியர்கள் உட்பட ஐவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இவர்களை படகில் அழைத்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தலைமன்னாரின் வட கடலில் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட டிங்கி படகொன்றை அவதானித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 
இதன்போது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வந்த குற்றச்சாட்டில் குறித்த மூவரும் அவர்களை அழைத்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவரும் 33 வயதுடைய பெண் ஒருவரும் 07 வயதுடைய பெண் பிள்ளை ஒருவரும் மற்றும் அவர்களை அழைத்து வந்த இலங்கையர்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

36 மற்றும் 44 வயதுகளையுடைய குறித்த இலங்கையர்கள் இருவரும் மன்னார், பேசாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment