தீமூட்டப்பட்ட கார் : உயிருடன் கருகி குழந்தைகள் உட்பட நால்வர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

தீமூட்டப்பட்ட கார் : உயிருடன் கருகி குழந்தைகள் உட்பட நால்வர் பலி

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் கார் தீ மூட்டப்பட்டதில் மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் உயிருடன் எரிந்து கருகிய அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பிரிஸ்பேர்னின் காம்ப்ஹில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பத்து வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

பெண்ணொருவர் பலத்த எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என குயின்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ள காவல்துறையினர் நாங்கள் அந்த பகுதிக்கு சென்றவேளை வாகனம் முற்றாக தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது என குறிப்பிட்டுள்ளனர். 

குறிப்பிட்ட ஐவரும் அருகில் உள்ள பகுதியொன்றிலேயே வசிக்கின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை காருக்குள்ளிருந்து பெண்ணொருவர் அவர் என்மீது பெட்ரோலை ஊற்றிவிட்டார் என அலறியதை நேரில் பார்த்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பயணியொருவர் காரில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு தன்னால் முடிந்தளவிற்கு முயற்சித்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

அதன்போது அந்த நபர் சிறிய காயங்களிற்குள்ளானர், காரில் காணப்பட்ட பெண் கடுமையான காயங்களிற்குள்ளாகியுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment