மது போத்தல்களுடன் மாதுகளையும் சலுகையடிப்படையில் வழங்கிய பிரபல ஹோட்டல் சுற்றிவளைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 19, 2020

மது போத்தல்களுடன் மாதுகளையும் சலுகையடிப்படையில் வழங்கிய பிரபல ஹோட்டல் சுற்றிவளைப்பு

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து மதுவரி திணைக்களத்தினால் மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் பம்பலப்பிட்டி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு தொகை வெளிநாட்டு மது போத்தல்களை கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

அதன்படி மதுவரித் திணைக்களத்தினால் மிகவும் சூட்சமான முறையில் முகாமையாளரிடம் நட்பு கொண்டு கலந்துரையாடி அதன் மூலம் விபரங்களைத் திரட்டிக் கொண்டனர். 

இதன்போது, 33 ஆயிரம் ரூபாவிற்கான சலுகையை பெற்றுக்கொண்டால், அதற்கு மேலதிகமாக அழகான இரு பெண்கள் மற்றும் விலையுயர்ந்த மது போத்தல்கள் மூன்று, பழதட்டு ஆகிய அடங்கிய பொதியைப் பெற்றுக்கொள்ளலாம் என முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த மதுவரி திணைக்கள அதிகாரிகள் 33 ஆயிரம் தொகையைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த பிரபல ஹோட்டல் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்தமையும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக குறித்த முகாமையாரை கைது செய்துள்ளனர். 

இதனையடுத்து, நேற்று மாளிகாவத்தை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மதுபான போத்தல் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மது வரித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment