கொரோனா வைரஸ் பரவலினால், மிக பாரியளவில் தாக்கத்துக்குள்ளாகி வரும் சீனாவின் வுஹானில் உள்ள 33 இலங்கை மாணவர்களை மீட்கும் பணியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL - 1423 விமானக் குழுவினர் ஈடுபட்டு அதனை வெற்றியுடன் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த விமான மற்றும் பணியாளர்கள் சிறப்பான முறையில் மாணவர்களை இன்று மத்தளை விமான நிலையத்தில் தரை இறக்கினர்.
விமானிகள் மற்றும் பணியாளர்கள் வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் விசேட ஆடைகளை அணிந்திருந்தனர். இவர்களது முயற்சி வெற்றிகரமாக முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் 33 மாணவர்களுடன் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.
இந்த சிறப்பு விமானத்தின் பணியில் ஈடுபட்ட விமானிகள் சமிந்தா சோய்சா மற்றும் அனுஷ்கா ஜிவேந்திரா. இவ்விமாணத்தில் ஃபர்ஹான் ஹனிபா தலைமைப் பணியாளராகவும், லிலாந்தா பட்பேரியா மற்றும் ரூமேஷ் பதிராஜா விமானப் பொறியாளர்களாகவும் பணியாற்றியிருந்தனர்.
இவர்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தீவிர முயற்சியின் காரணமாக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உட்பட்ட UL - 1423 என்ற விமானம் நேற்றைய தினம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment