கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு உதவி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 1, 2020

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு உதவி

நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பிற்காக சுகாதார அமைச்சு 60 மில்லியன் ரூபா பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்களுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக உபகரணங்களை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக சுகாதார அமைச்சிற்கு அறிவித்திருப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையில் ஈடுபடும் போது, வைத்திய விநியோகப் பிரிவின் மூலம் ஐடிஎச் வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு பல சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ள அவசர நிலைமைகளின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த வைத்தியசாலைகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய, கொரோனா ரைவஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய செயற்பாட்டுக் குழு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் தலைமையில் நேற்று மாலை கூடியது.

இதன்போது இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment