நாள்தோரும் ஆயிரக்கணக்கில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் 'சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசர நிலை' யை நேற்றைய தினம் பிரகடனம் செய்தது.
இதனையடுத்து தமது நாட்டை பாதுகாக்கும் நோக்கில், கடந்த இரண்டு வாரங்களுக்குள் சீனாவுக்கு விஜயம் செய்த வெளிநாட்டவருக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை ட்ரம்ப் நிர்வாகம் இந்த முடிவை கொண்டுவந்துள்ளதுடன் அமெரிக்காவில் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கான பயணத் தடையை வெளியிட்டது.
இந்நிலையில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சீனாவுக்கான அமெரிக்க விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்துள்ளது. மார்ச் 27 வரை திட்டமிடப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ் அடுத்த புதன்கிழமைக்குள் சீனாவுக்கான அனைத்து அமெரிக்க விமானங்களையும் நிறுத்துவதாகவும், குறைந்தது ஏப்ரல் 30 வரை தடையைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை தொடக்கம், சென்பிரான்சிஸ்கோவிலிருந்து ஹொங்கொங்கிற்கு தினசரி ஒரு விமானத்தைத் தவிர அனைத்து விமானங்களையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது, மார்ச் 28 ஆம், 24 ஆம் திகதி வரை தடையை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் ஒருவர் கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் நோயளிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இதேவேளை சீனாவிலிருந்து வரும் அமெரிக்கர்கள், 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment