இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திர சில்வாவிற்கு தொடர்பு இருக்கிறதென அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இராணுத் வதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளமை தொடர்பாக மைக் பொம்பியோ தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.
அதாவது யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திர சில்வாவிற்கு தொடர்புகள் உள்ளதன் காரணமாகவே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இராணுத் வதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment